கிண்ணியாவில் மஞ்சள் நிறமாகும் வேளான்மைகள்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேசத்தில் பீங்கான் உடைந்தாறு, புளியடிக்குடா, வன்னியனார் மாடு விவசாய சம்மேளன பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகள் தற்போது திடீரென மஞ்சள் நிறமாக மாறி நெற்கதிர்கள் முதிவதில் பாதிப்பை ஏற்படுகின்றது.

விவசாயிகள் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான விவசாய போதனாசிரியரை வரவழைத்து தங்களுடைய வேளாண்மைகளை காண்பித்திருக்கின்றார்கள்.
வேளாண்மைகளை ஆய்வுசெய்த போதனாசிரியர் இவ்வாறு மஞ்சளாக பிரச்சினை போசாக்கு குறைவினாலும் ஏற்படலாம் அல்லது நோய் தாக்கமாக இருக்கலாம் என கூறியுள்ளதோடு மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக வேளாண்மை மாதிரிகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.
விளைச்சலை பாதிப்பதோடு விவசாயிகளுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்ற இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட வீடுகளை வழங்குவதற்கு அதிகாரிகளும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :