தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், உரிய பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
பாடசாலை வகுப்பறையின் அளவையோ, மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிள்ளைகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment