ரஜிவ் காந்தி கொலைவழக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பேரரிவாளனின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் 3 நாட்களில் தமிழக ஆளுனர் தீர்மானமொன்றை மேற்கொள்வார் என இந்திய மத்திய அரசின் தலைமை அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றத்தில் பேரரரிவாளன் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைகள் இன்று இடம்பெற்ற போதே இந்திய மத்திய அரசின் தலைமை அரச சட்டத்தரணி துஷார் மேத்தா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜிவ் காந்தி கொலை வழக்கின் ஏழு குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு 03 ஆண்டுகளுக்கு முன்னர் ஆளுனருக்கு பரிந்துரைத்திருந்தது,
இந்தநிலையில் ஆளுனரின் தீர்மானம் தாமதமாவதையடுத்தே பேரரிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்,
இதற்கு முன்னர் குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லையென கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது தொடர்பான தீர்மானத்தை ஆளுனர் அறிவிப்பார் என மத்திய அரசின் சட்டத்தரணி கூறியிருப்பது ரஜிவ்காந்தி கொலை வழக்கில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment