கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் முத்துபண்டா இடமாற்றம்.



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு இளைஞர்விவகார முன்பள்ளி அமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டா மாகாண வீதிஅபிவிருத்தி அமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளராக திரு முத்துபண்டா 2வருடங்கள் 8மாதங்கள் சேவையாற்றியிருக்கிறார்.

அவருக்கான பிரியாவிடை நேற்று(4) திருகோணமலையிலுள்ள மாகாண கல்வியமைச்சில் நடைபெற்றது.

மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் தா.சித்திரவேல் கலாசாரத்திணைக்களப்பணிப்பாளர் ச.நவநீதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பிரியாவிடைபெறும் செயலாளர் முத்துபண்டாவின் சேவை பற்றி பலரும் உரையாற்றியதுடன் நினைவுப்பரிசுகளும்வழங்கப்பட்டன.

இவரது இடத்திற்கு கிறிஸ்ரி பெர்ணாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :