திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
திருகோணமலை நீதிமன்றில் சட்டத்தரணிகளாக செயற்படும் 47 சட்டத்தரணிகளுக்கு கடந்த புதன்கிழமை(20),மற்றும் வியாழக்கிழமை (21)களில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் முடிவுகள் இன்றைய தினம்(24) வெளிவந்த நிலையிலே சட்டத்தரணிகள் எவரும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment