மட்டு.போதனா வைத்தியசாலையின் சிற்றீ ஸ்கன் இயந்திரம் செயலிழப்பு:நோயாளிகள் அவதி: அரசியல்வாதிகள் கவனமெடுப்பார்களா?



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்த ஒரேயொரு சிற்றீ ஸ்கன் இயந்திரம் கடந்த வெள்ளியன்று செயலிழந்துள்ளது.

16வருடங்கள் பழையதான இவ்வியந்திரம் செயலிழந்துள்ளதால் வைத்தியசாலை நிருவாகம் தொடக்கம் நோயாளிகள் வரை பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.நாளொன்றுக்கு 48 படங்கள் எடுக்கக்கூடிய இவ்வியந்திரம் அடிக்கடி பழுதாகிவந்து தற்போது முற்றாக செயலிழந்துள்ளது.
அவசரதேவையின் நிமித்தம் சீற்றி தேவைப்படுகின்ற நோயாளிகள் 40கி.மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் குறுகியநேரத்துள் சிற்றீஸ்கன் எடுக்கவேண்டிய பாரிசவாதம் மற்றும் ஜசியு நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாமெனத் தெரியவருகிறது.

கொரோனா பரவிவருகின்ற இவ்வேளையில் வைத்தியசாலை நிர்வாகம் கொரோனா நோயாளர்களுக்கான களப்பணி சேவையாளர்களின் நலன் இவற்றையெல்லாம் சீரமைப்பதிலும் தொற்றாளர்களை இடம்மாற்றுவதிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வேளையில் இவ் இயந்திரம் பழுதடைந்துள்ளமை அவர்களுக்கு பாரிய அசௌகரியத்தைக்கொடுத்துள்ளது.

முழுஇலங்கையிலும் போதனாவைத்தியசாலைகளில் 128 படங்கள் எடுக்கக்கூடிய சிற்றீஸ்கான் இயந்திரங்கள் உள்ளன. ஆக மட்டு.போதனாவைத்தியசாலையில் மட்டுமே 4படங்கள் எடுக்க்ககூடிய 16வருடம் பழைமைவாய்ந்த சிற்றீ இயந்திரம் இருக்கிறது. கல்முனையிலிருப்பது 16படங்கள்எடுக்கக்கூடியது.

பொதுவாக ஒரு சிற்றீஇயந்திரம் 10வருடகாலத்திற்கு மட்டுமே பிரச்சினையின்றி இயங்கும்.அதன்பிறகு அடிக்கடி பிரச்சினைகொடுத்துக்கொண்டேயிருக்கும். எனவே இங்கு புதிய சிற்றீஸ்கான் இயந்திரம் அவசியம் விரைவாக பெறப்படவேண்டும் என்று ஒரு வைத்தியநிபுணர் கருத்துரைத்தார்.

இதற்கென கேள்விப்பத்திரம் கோரியிருப்பதாகவும் அமைச்சரவை விசேட நிதியமைப்பின் கீழ் கொள்வனவு செய்யப்படவேண்டும் என்பதால் அரசியல்வாதிகளின் கவனம் இங்கு ஈர்க்கப்படுகின்றது. குறிப்பாக மட்டு.நகரில் இருக்கும் அரசோடு சேர்ந்த அரசியல்வாதிகள் மிகவும்கூடுதலான கவனமெடுப்பார்களா?என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதேவேளை றோட்டரிக்கழகம் ஒரு இயந்திரத்தை அன்பளிப்புச் செய்யமுன்வந்தபோதிலும் அதற்கான சுகாதாரஅமைச்சின் அங்கீகாரம் மறுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது. எனவே அதையாவது முதலில் பெற அரசியல்வாதிகள் முயற்சிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையில் இரு சிற்றீஷ்கான் இயந்திரங்களாவது இருக்கவேண்டும். அப்போதுதான் நோயாளிகளுக்கு தடங்கலின்றி சேவையாற்றலாம் எனக்கூறப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :