மூன்று மாதங்களின் பின் பொடி மெனிக்கே இரயில்கள் சேவையில் ...


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

மூன்று மாதங்களின் பின்னர் பொடிமெனிக்கே ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மத்திய மாகாண புகையிர சேவை பொறுப்பதிகாரி ஆனந்த கருணாரத்ன தெரிவித்தார்.

இதற்கமைவாக 18/01 இன்றைய தினம் இரண்டு பொடிமெனிக்கே ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னரே வேறு ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளைக்கும் , பதுளையில் இருந்து கொழும்புக்குமாகவே இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரப்பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ள கொவிட் 19 பாதுகாப்புக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே சேவையை நடத்தவதாகவும் வரும் பயணிகள் முககவசம் அணிந்து சுகாதார விதிமுறையோடு வருகைத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :