இந்தியா;முன்னுரிமை வழங்குவதில் இலங்கைக்கு முதல் இடம்!



J.f.காமிலா பேகம்-
190 நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள காத்திருப்புப் பட்டியலில் உள்ள போதிலும், இந்தியா இலங்கைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமையவே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

குறித்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, சீனாவினால் 3 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்

எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்கப்படுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலணியின் தலைவரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :