வீதிச்சமிக்கை விளக்குகள் இல்லையேல் விபத்துக்கள் அதிகம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமான பிரதான சந்தியாகவும் அதிக விபத்துக்கள் நிகழும் இடமாகவும் கொழும்பு - மட்டக்களப்பு, ஹ{தா பள்ளிவாயல் வீதி மற்றும் எம்.பி.சீ.எஸ். வீதிகள் ஒன்றிணையும் சாவன்னா ஹாஜியார் சந்தியில் வீதிச்சமிக்கை விளக்குகள் அமைக்கப்பட வேண்டுமென ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸ{ல் றஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 34வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சந்தியானது இப்பிரதேசத்தில் பிரபலமானதுடன், இப்பிரதேசத்திலுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலை, பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம், ஷரீப் அலி வித்தியாலயம், ஷாஹிரா வித்தியாலயம் போன்ற பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வீதியில் பயணிப்பதுடன், மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியை ஊடறுத்து அமைந்துள்ளமையினால் அதிக விபத்துக்கள் இடம்பெறும் இடமாக இப்பிரதேசம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள குறித்த பிரதான சந்தியில் வீதிச் சமிக்கை அமைப்பது தொடர்பில் இரு பிரதேச சபைத்த விசாளர்களும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு மாவட்ட செலயகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கவனம் செலுத்த கோரிக்கை விடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :