பொதுவாக தட்டிக்கொடுப்பதும், பாராட்டுவதும் இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கான எத்தனங்களாகும். அவ்வாறு நாம் பாராட்டி, தட்டிகொடுப்பதனால் அவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வார்கள் என தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடாளாவிய ரீதியில் நடாத்திய வீட்டுத்தோட்டப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களைப் பெற்றுக்கொண்ட போட்டியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், நடப்பு வருடத்திற்கானகழகங்களின் சம்மேளனத் தெரிவும் அன்மையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆர்.பிரபீன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இன்று முகப்புத்தகங்களைப்பாருங்கள் தங்களது திறமைகளையும், ஆற்றல்களையும் அவரவர்களின் முகநூல்களில் பதிவேற்றம் செய்து எத்தனை பின்னூட்டங்கள் வந்திருக்கின்றது? எத்தனை பேர் விரும்பியிருக்கின்றார்கள்? என்று பார்த்து சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
அதே போல், இன்றைய இளைஞர்களின் ஆளுமைகள் அது எதுவாக இருந்தாலும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
அந்த வகையில், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர், யுவதிகள் இம்மாவட்டத்தின் முன்மாதிரியானவர்களாகத் திகழ வேண்டும்.
மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்கின்ற இளைஞர் அமைப்புக்களுடன் நல்ல தொடர்பாடலையும், உறவையும் கட்டியெழுப்பி, பரஸ்பர நம்பிக்கையுடன் வாழப்பழகுவோம்.
அத்துடன், நாட்டின் அசாதாரன நிலமையினைக் கருத்திற்கொண்டு சுகாதார வரையறைகளைப் பேணி நாமும், நமது மாவட்டமும் நமது தேசமும் வெற்றி பெற திடசங்கற்பம் பூணுவோம் என மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில், 2020ம் வருட காலப்பகுதியில் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த இளைஞர், யுவதிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது
இந்நிகழ்வில், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே. ஜேசுதாஸன், மண்முனை வடக்கு இளைஞர் அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment