கிண்ணியா எழிரங்கு விளையாட்டு மைதானத்திற்கு தீர்வின்றேல் மக்கள் மூலமாக போராட்டங்களை நடத்தியாவது தீர்வை பெறுவோம். -கிண்ணியா நகர சபை உறுப்பினர் முகம்மட் மஹ்தி



எப்.முபாரக்-
கிண்ணியா எழிரங்கு விளையாட்டு மைதானத்திற்கு தீர்வின்றேல் மக்கள் மூலமாக போராட்டங்களை நடத்தியாவது தீர்வை பெருவோம் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் முகம்மட் மஹ்தி தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபையிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கின்றனர்:

கிண்ணியா எழில் அரங்கு மைதானம் என்னுடைய பகுதியில் அமைந்துள்ளது,இவை தொடர்பாக அப்பகுதி விளையாட்டு வீரர்களும்,கழகங்களும் என்னிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள் அங்கே துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பையும்,குடிநீர் இணைப்பையும் இதற்காக நகர சபையின் ஊடாக பல முயற்சிகளை எடுத்தேன்,தற்போதைய நகர சபை செயலாளரிடம் எழுத்து மூலமாக சமர்பித்துள்ளேன்,இரண்டு வருடமாக பேசி வருகின்றேன்.இவை தொடர்பாக சபையிலும் கதைத்து அதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுத்துள்ளேன்.உரிய மீளினைப்பை பெறுவதற்காக சபை அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தும் இது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இவ்விடயத்தினை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதோடு இன்னும் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ள வில்லையாயின் மக்களை ஒன்று திரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும்.

எனவே இவ்விடயத்தினை ஒப்பந்த காரர்களும், நகர சபை உத்தியோகத்தர்களும் கவனம் செலுத்தி அந்த மைதானத்திற்கான மீள் இணைப்பை ஏற்படுத்துமாறு இறுதி அறிவிப்பாக தெரிவிக்கின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :