வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை சந்தியில் இன்று (25) இடம்பெற்ற விபத்தில் இருவர் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதான வீதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், எம்.பி.சீ.எஸ்.வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சிக்கிய இருவரும் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment