டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இருவருக்கு 22/01/2021 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலா சுகாதர வைத்திய அதிகாரி காரியால பொது சுகாதார அதிகாரி கதிர்வேல் ஜெய்கணேஸ் தெரிவித்தார்
நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கும் நோர்வூட் வெஞ்சர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரும் சிகிச்சைக்கான வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது போது அவர்களுக்கு மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையிலே தொற்று உறுதியாகியுள்ளது
கண் அறுவை சிகிச்சைக்கா 21/01 வந்திருந்த பெண் மற்றும் வெட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற வந்திருந்த இளைஞனுக்கு ஆரம்ப சிகிச்சையின் பின் மேற்கொண்ட என்டிஜன் பரிசோனையிலே தொற்று உறுதி இருப்பது உறுதித்தானது மேலும் அவர்களது குடும்பத்தினர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment