ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் தொகுதிக்கான விசேட கட்சிக் கூட்டம்.



எப்.முபாரக்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் தொகுதிக்கான விசேட கட்சிக் கூட்டம் நாளை (23) காலை 9.00 மணிக்கு கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதோடு மூதூர் தொகுதியின் தொகுதிக்கான கட்சிக் காரியாலயம் புதுநகர், பைசல் நகர் கிண்ணியா - 03 இல் திறந்துவைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனயின் மூதூர் தொகுதி இணைப்பாளர் இப்ராஹிம் சதாத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: திருகோணமலை அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நிமல் காமினியின் வழிகாட்டலின் கீழ், கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபச அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் காணி அமைச்சர், மகாவலி இராஜாங்க அமைச்சர், கட்சியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள், கட்சியின் கொழும்பு காரியாலய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் மூதூர் தொகுதி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகாண வேண்டியிருக்கிறது.

அடுத்து அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களில் மூதூர் மக்களையும் பங்குதாரர்களாக ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிது.
ஆரம்ப கால கட்சி ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கும் கட்சியின் உண்மையான ஆதரவாளர்களுக்கும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த நிலையில் மூதூர் தொகுதிக்கு ஆளுங்கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் இல்லாததனால் மேற்கூறிய விடயங்களை தீர்ப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
எனவே கிண்ணியாவில் திறக்கப்படவுள்ள கட்சி காரியாலயத்தின் மூலம் இலகுவாக இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :