கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்: வாழைச்சேனையில் சம்பவம்!


எச்.எம்.எம்.பர்ஸான்-

மீ
னவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடல் பாம்பு ஒன்றை புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கொண்டு சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தான் மீன் பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக குறித்த மீனவர் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள் அது கடலில் உள்ள அஞ்சாலை எனும் வகை பாம்பு என்று அடையாளப்படுத்தினர்.

குறித்த கடல் பாம்பு 7 அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்டதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :