பல்துறை வித்தகர் சந்திரலிங்கம் கல்முனையின் அருஞ்சொத்து பாராட்டுவிழாவில் சிறுகதை எழுத்தாளர் சபா.சபேசன் புகழாரம்.


வி.ரி.சகாதேவராஜா-

ய்வுநிலை அதிபரான திரு.சந்திரலிங்கம் இந்த மண்ணில் பல நடிபங்குகளை வகித்துவருகிறார். கல்வியியலாளராக யோகா கலைநிபுணராக கராட்டே வீரராக இலக்கியவாதியாக சமுகசேவையாளனாக எழுத்தாளராக திகழ்ந்துவருகிறார். அவருக்கான வித்தகர் விருது முற்றிலும் பொருத்தமானதே.அவர் மேலும் பல சாதனைகளைப்படைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிஉயர்ந்த வித்தகர் விருதைப்பெற்ற கா.சந்திரலிங்கத்தைப் பாராட்டிப்பேசிய பிரபல சிறுகதை எழுத்தாளரும் கவிஞருமான சபா.சபேசன் புகழாரம் சூட்டினார்.

கல்முனைநெற் ஊடகக்குழுமத்தின் ஏற்பாட்டில் தம்பலவத்தை ஜீவாதென்னந்தோப்பில் நடைபெற்ற வித்தகர் சந்திரலிங்கம் கௌரவிப்புவிழாவில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.

இக்கௌரவிப்பு விழா கல்முனைநெற் ஊடகவலையமைப்பின் பணிப்பாளர்சபையின் பிரதானி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் தினகரன் முன்னாள் பத்திராதிபர் க.குணராசா கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் வித்தகர் சந்திரலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

எழுத்தாளர் சபா.சபேசன் மேலும் பேசுகையி;ல்
திரு.சந்திரலிங்கம் நிறைய நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார் 1971களில் அக்னி இலக்கிய கலை வட்டத்தில் பல நாடகங்களை நடித்துள்ளார். கையெழுத்துபிரதிகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
1966இல்படிக்கின்றபோது கல்முனை பற்றிமா பாடசாலையில் தமிழ்போட்டிகளில் பங்கேற்று சாதனைபடைத்தார். அன்று வெளியிட்ட கதிர்என்ற சஞ்சிகையில் இன்றும் அப்பதிவைக்காணலாம்.

5ம் வகுப்பு படிக்கும்போதே றெஸ்லின் கராட்டெ சிலம்பம் கத்தடிகண்டம் மெஸ்மரிசம் போன்ற கலைகளில் ஈடுபட்டார். இலங்கை வானொலியில் 100க்கு மேற்பட்ட ஆக்கங்களைப்படைத்தவர். சக்தி ரிவியில் யோகா கலைபற்றி தொடர் நிகழ்ச்சி செய்தவர்
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இலக்கியவிமர்சனம் செய்தவர்.இந்திய தூதுவராலயத்தில் யோகா பயிற்றுனராக சேவையாற்றியவர்.

ஆரம்பத்தில் கணக்காளராகவிருந்து பின்னர் ஆசிரியர் அதிபர் என 26வருடங்கள் கல்விஉலகில் தடம்பதித்தவர். அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனரமைப்பு சங்கத்தின் தலைவராகவும் அது இயக்குகின்றன குருக்கள்மடம் விபுலானந்த முதியோர் நலன்புரி நிலையத்தின் பொறுப்பாளராக கடந்த 3வருடங்களாக அருஞ்சேவையாற்றிவருகிறார்.
இப்படி பலதுறைகளிலும் தடம்பதித்து சாதனை படைத்தவர்களுக்கே இவ்வாறான வித்தகர் பட்டம் வழங்கப்படவேண்டும். அது திரு.சந்திரலிங்கத்திற்குக் கிடைத்தமை மிகப்பொருத்தமே. வாழ்த்துக்கள். என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :