முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டு கிழக்கை வடக்கோடு இனைக்க முற்படுவது மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்.



எப்.முபாரக்-
முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டு கிழக்கை வடக்கோடு இனைக்க முற்படுவது மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவே அமையும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம். ரி.ஹஸன் அலி நேற்று வெள்ளிக்கிழமை(15) தெரிவித்தார்.
தமிழ் முஸ்லிம் அரசியல் நிலவரம் தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும் போது:
கிழக்கு முஸ்லிம்கள் வடக்கு முஸ்லிம்களோடு மட்டுமன்றி முழு நாட்டு முஸ்லிம்களினதும் அரசியல் நிரந்தர அந்தஸ்தைப் பெறும் முயற்சியை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.நிபந்தனையற்ற ஆதரவை முஸ்லிம்கள் வழங்க முடியாது. இணைப்பு நிரந்தரமானால்தான் தமிழ் சகோதரர்கள் நிம்மதியாக வாழ முடியும்.

அத்தோடு இது கிழக்கு மக்களின் விருப்பைக் கேளாமல் வடக்கோடு அவர்களை இணைத்துவிடும் செயலுமாகும். அத்தோடு கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை யும் அவமதிக்கும் செயலாகும். இணைப்பின் பின் கிழக்கு பிரிய வேண்டுமா எனத்தீர்மாணிக்கும் பொறுப்பை சர்வஜன வாக்கேடுப்பு மூலம் கிழக்கு மக்களிடமே விட முயல்வது கிழக்கில் இரத்தக் களரியைத் தோற்றுவிக்க முயலும் விடயமுமாகும். எனவே இணைப்பு நிகழுமாயின் முஸ்லிம்களுக்கான ஆகக்குறைந்த பாதுகாப்பு முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபையே எனத்தனித்துவத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் வலியுறுத்தி நின்றார்.
ஓர் உண்மைப்போராளி சுய அடிப்படை உரிமை விடயத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதற்குத் தனித்துவத் தலைவர் அஷ்ரப் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருக்கிறார்.

09.12.1989 இல் பொலிஸ் ஆணைக்குழுச் சட்ட விவாதத்தில் அவருக்கு உரையாற்ற போதிய நேரம் வழங்கப்படாமைக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தனது பிரதிநிதியயை அழைக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து தன் நியாயத்தை பாராளுமன்றத்தில் தட்டிக்கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

அவர் ஆற்றிய உரை எந்த ஓர் அரசியல் தலைவருக்கும் ஒரு முன்மாதிரியாகவே காணப்படுகிறது. அன்னாரின் குரலற்ற இன்றைய முஸ்லிம் அரசியலினால் முஸ்லிம் தேசியம் ஒரு சூனியப்பிரதேசமாகவே காணப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் இதயம் அம்பாறை மாவட்டமே. ஆனால் அது இன்று பெரும் சூனியப் பிரதேசமாக மாறியிருக்கிறது என்பது ஜீரணிக்க முடியாத உண்மை நிலவரமாகும். என்பதை அழுத்தமாக கூறலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :