சாய்ந்தமருது அனைத்து பள்ளிவாசல், அமைப்புக்களின் நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.- முன்னாள் கல்விப் பணிப்பாளர் முகம்மட் முக்தார்.



கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் ஊர்களில் அனைத்து பள்ளி
வாசல் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் எனும் பெயரில் ஊர்கள் வழிநடாத்தப்படும்போது சாய்ந்தமருதுவில் மட்டும் அவ்வாறான அமைப்பொன் றை ஏற்படுத்துவதில் சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் நிர்வாகம்அசட்டயீனமாக ஏன் உள்ளது எனும் கேள்வி எழுந்து உள்ளது.

காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர், அக்கயைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பல முஸ்லிம் கிராமங்களில் இவ்வாறான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது பலரும் கருத்துகள்கள் உள்வாங்கப்பட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றன.
இவ்வாறான அமைப்புக்களில் பள்ளிவாயில் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்
கள், உள்ளூர் சிவில் அமைப்புக்கள் அடங்கிய பலர் அங்கம் வகிக்கின்றனர்.
இதன் மூலம் மசூறா அடிப்படையில் சகல விடயங்களும் கையாளப்படுகிறது.
ஆனால் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிநிருவாகம் மட்டும் அதன் தலைவர், செய்
லாளர் ஆகியோரால் மட்டும் Dictatorship முறையில் தீர்மானங்களை எடுக்கின்ற
னர். 
முக்கிய கூட்டங்களில் ஊரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு
கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். விடய அறிவற்ற தலைவரும் செயலாளரரும் சகல துறை விற்பன்னர்கள் போல்செயற்பட்டு தமது திறமைகளை(?) வெளிக்காட்டி வருவது பெருமையாக உள்ளது.
ஊரில் உள்ளவர்கள் எவரும் இவர்களைவிட தகுதி, தராதரத்தில் உயர்ந்தவர்கள்
எவரும் இல்லையென்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது.

இந்த ஊரில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன.வைத்தியசாலை, பாடசாலைகள் வீதிகள், திண்ம கழிவகற்றல், பிரதேச செயலகம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளன. சாய்ந்தமருது முகைதீன் பள்ளிவாசல் மூலம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அப்பள்ளி வாசலின் மஹல்லா நிர்வாகிகளைக்கூட தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்க மறுக்கின்றனர். இது தான் அவர்களது ஜனநாயகம்.
எனவே, இனியும் தாமதிக்காது மேற்படி அமைக்க சாய்ந்தமருது பள்ளிவாசல்
நிருவாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.மக்களது உரிமையை நசுக்கி
சர்வதிகார நிருவாகம் நடாத்த இடமளிக்க முடியாது.

அனுமதியற்ற முறையில் நிருவாகத்தில் தொடர்ந்து இருப்பதற்காக நகர சபைக்கு கோசத்தை கையில் எடுத்து எதுவும் நடக்காத நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :