அரசியல்வாதிகள் தங்களுக்குள் விரோதிகளாகவும், சமூக விடயங்களை முன்னிறுத்தி மக்களுக்காக அவர்கள் மல்லுக்கட்டுவதாக வெளியே தென்பட்டாலும் அவர்களிடம் பொதுவான ஒரு ஒற்றுமை உள்ளது.
அதுதான் ரகசியம் காக்கின்ற தன்மை. எதனையெல்லாம் வெளியே மேடைகளில் உளறித்திரிந்தாலும், ஒரு விடயத்தை பற்றி மட்டும் வாயே திறக்கமாட்டார்கள்.
அதென்ன ரகசியம் ?
அதுதான் பணத்தினை கொட்டிப் பிரித்தல்.
பணத்தினை கொட்டி பிரிப்பதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதையும், கட்சி மாறியதையும், வேறு கட்சிகளுக்கு சென்றதையும், வசை பாடியதனையும் பாமர மக்களும், எடுபிடிகளும் அறியமாட்டார்கள்.
என்னதான் வசைபாடினாலும், பணத்தினை கொட்டிப் பிரிப்பதில்தான் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது என்ற சிதம்பர ரகசியத்தை எந்த தரப்பாரும் வெளியே கூறுவதில்லை.
ஆனால் அவர்கள் சமூக பிரச்சினையை முன்னிறுத்தி அதனாலேயே தங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டதாக வெளியே கூறிக்கொள்வார்கள். இதனை பாமர மக்களாகிய நாங்கள் அப்படியே உண்மையென நம்பிவிடுகின்றோம். இதுதான் எங்களது பலயீனம்.
மக்களின் இந்த பலயீனத்தினை நன்றாக பயன்படுத்தி கொள்ளையடித்து ஏப்பமிடும் அரசியல்வாதிகளிடம், “ஜனாஸா எரிக்கின்றார்கள், மக்களுக்காக போராடுங்கள்” என்று நாங்கள் கூறினால் அவர்கள் எப்படி போராடுவார்கள் ? மொத்த வியாபாரிகளிடம் போராட்ட உணர்வு இருக்குமா ?
இங்கே கொட்டிப் பிரிப்பதற்கு தயாரான நிலையில் உள்ளதுபோன்ற தோற்றத்தில் உள்ள படத்தை காணலாம்.
0 comments :
Post a Comment