இளம் மாதர் முஸ்லிம் அமைப்பினால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் காலணி பெற்றுக் கொள்வதற்கான பண வவுச்சர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் தலைவி தேசமாண்ய திருமதி பவாஷா தாஹா மற்றும் அமைப்பின் செயலாளர் திருமதி சுரையா ரஸ்வி ஆகியோரின் வழிநடாத்தலில் தெமடகொட வை.எம்.எம்.ஏ தலைமைக் காரியாலயத்தில் நேற்று (23) மாலை இடம் பெற்றது.
இதன்போது முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு மேற்படிப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் ஏனைய மாவட்டங்களில் உள்ள அமைப்பின் அங்கத்தவர்கள் மூலம் அம்மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அமைப்பின் தலைவி தெரிவித்தார். அத்துடன் அமைப்பின் பிரதி பேற்றன் திருமதி மர்லியா சித்தீகின் அனுசரணையில் வெள்ளம்பிட்டியில் இருக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதி அத்தீகா என்பவருக்கு அவரின் சுயதொழிலுக்காக மின்சாரத்தில் இயக்கும் தேங்காய் திருவும் இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்நிகழ்வில் அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment