அட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனாவிழிப்புணர்வு


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

கொரோனாவிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று 15/01 அட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.

அட்டன் பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி பலிபானவின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புனர்வு நடவடிக்கை குறிப்பாக மாணவர்களை மையப்படுத்தியதாக இருந்தது.

இதன்போது துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒலி பெருக்கிகள் ஊடாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்கள் சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் வேண்டும்', பாடசாலை நேரங்களில் கட்டாயமாக முகக் கவசத்தை அணிந்திருப்பது அவசியம். அவ்வாறு முகக் கவசத்தை கழட்டினால் அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்து பின்னர் பாவிக்க வேண்டும். சமூக இடைவெளிகளை பேண வேண்டும்.

கை கழுவும் நடவடிக்கைகளை அடிக்கடி முன்னெடுத்தல் வேண்டும். போன்ற பல கருத்தான விடயங்களை உள்ளடக்கி துணடு;பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழ், சிங்கள மொழிகளிலும் விழிப்புனர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :