உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சி விசாரணைகள் நிறைவு..!

யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நேற்று (19) இவ்வாறு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சில தினங்களில் அவர் சாட்சி வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்த உமர் மொஹமட் எனும் நபர் நேற்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணைகளுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

குறித்த நபர் சாட்சி வழங்கியதன் பின்னர் சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெரண
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :