இன்று காரைதீவில் புத்தாண்டு உறுதியுரை சத்தியப்பிரமாணம்



வி.ரி.சகாதேவராஜா-
புத்தாண்டில் அரச காரியாலயங்களில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதியுரை சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இன்று(1)வெள்ளிக்கிழமை பரவலாக நடைபெற்றது.
காரைதீவு பிரதேசசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புத்தாண்டு உறுதியுரை வாசித்து சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு நேற்று தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக பிரதேசசபை வளாகத்தில் தேசியக்கொடியை தவிசாளர் கி.ஜெயசிறிலும் சபைக்கொடியை சபையின் செயலாளர் அ.சுந்தரகுமாரும் ஏற்றினர்.தேசியகீதம் இசைக்கப்பட்டது.
சபை உத்தியோகத்தர்கள் கையை நீட்டி தவிசாளர் கி.ஜெயசிறில் முன்னிலையில் உறுதியுரையை வாசித்து சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.

நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்கு2நிமிடநேரம் மௌனாஞ்சலி நிகழ்த்தப்பட்டது.பின்னர் தவிசாளார் புதுவருட விசேட உரைநிகழ்த்தினார்.

பின்னர் புத்தாண்டு பிறந்ததையொட்டி பிறந்ததினகேக் தவிசாளரால் வெட்டப்பட்டு பகிரப்பட்டது. பின்பு கைவிசேசமும் தவிசாளரால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :