சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு


எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து 20 கட்டாக்காலி மாடுகளை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிடித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமம் ஏற்படும் நிலையை கவனத்தில் கொண்டும் இது தொடர்பாக பொதுமக்களினால் பிரதேச சபையின் மீது முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டது.

இதற்கமைவாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பலதடவைகள் அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் இம்மாட்டு உரிமையாளர்கள் ஒரு மாட்டிற்கு தண்டப்பணமாக 5,000.00 ரூபாய் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவாக மேலதிகமாக 1,000.00 ரூபாய் அறவிடப்படும் மேலும் 03 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறாவிட்டால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :