ரஞ்ஜன் மீண்டும் சபைப்பிரவேசம் குறித்து விவாதம்?



J.f.காமிலா பேகம்-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தொடர்பில் இன்று கூடுகின்ற நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுக்கவுள்ளது.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் சபைப்பிரவேசம் குறித்து விவாதிப்பதற்கான சந்தர்ப்பத்தை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.பி மனோ கணேசன்,

இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதற்கான அங்கீகாரம் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதற்கான அனுமதியை வழங்கும் பொறுப்பு, சபாநாயகர் வசம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கதைப்பதற்கு இன்னும் காலம் உள்ளதாக கூறிய மனோ கணேஷன், தற்போது அவரின் நாடாளுமன்ற பிரவேசம் குறித்தே கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :