கொரோனா தொற்றாளர்களின் சுய கெளரவத்துக்கு மதிப்பளியுங்கள்-எஸ்.எல்.முனாஸ்

பைஷல் இஸ்மாயில்-
ருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது என்று அறிந்து கொண்டால் அவரின் சுயகெளரவத்தை மீறாது நடந்து கொள்ளுங்கள் அவரையும் அவரது குடும்பத்தினையும் தீண்டாதோர் போன்று அவசரமாக வீட்டுக்கேற்றுகளில் நோட்டீஸ் ஒட்டுவதும் ஊருக்கு தெரியப்படுத்தி அவமானப்படுத்துவதையும் உடனடியாக சம்மந்தப்பட்ட தரப்பினர் கைவிட வேண்டும் என்று அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தனதறிக்கையில்:

இன்று ஒருவர் தானாக முன்வந்து பிசிஆர் அல்லது அண்டிஜன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்கிறார் என்றால் அல்லது வைத்தியசாலையில் இருக்கும் ஒருவருக்கு மேற்குறித்த பதிசோதனை நடக்கிறது என்றால் அதன் முடிவுகளை ரகசியமாகக் கையாளுங்கள்.

குறித்த நபரை மதித்து அவருக்கும் குடும்பங்கள் சுயகெளரவம் என்றொன்று இருக்கிறது அவைகளுக்கு மதிப்பளித்து கொரோனா தொற்றுத்தான் என்றாலும் உரிய முறையுடன் கையாண்டு அவருடன் பேசி தீர்மாணங்களை மேற்கொள்ளல் நன்று.

மாறாக ஊர் புதினம் பார்த்து குடும்பமே கவலைப்பட்டு கத்திக் கதறும் நிலையினை தயவு செய்து சம்மந்தப்பட்ட தரப்பினர் கைவிட்டு சுமுகமாக உரிய நபருக்கும் அவர் வீட்டாருக்கும் மாத்திரம் தெரியுமாறு நடந்து கொள்ளல் இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதனை புரிந்து நடத்தல் அனைவருக்கும் சிறப்பு என்று முனாஸ் தனதறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :