முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான உரிமை மீறப்படுவது மூன்றாம் உலக போருக்கு காரணம் ஆகி விடலாம். - எச்சரிக்கிறது அரசியல் புரட்சிகர முன்னணி



எஸ்.அஷ்ரப்கான்-
முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்கின்ற அடிப்படை உரிமை இலங்கையில் மீறப்படுகின்ற நிலைமை மூன்றாம் உலக யுத்தத்துக்கு காரணம் ஆகி விட கூடும் என்று அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம். சி. ஆதம்பாவா தெரிவித்தார்.
இவரின் மாளிகைக்காடு அலுவலகத்தில் இன்று (23) சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து சம கால நடப்புகள் தொடர்பாக பேசியபோது சட்டத்தரணி ஆதம்பாவா மேலும் தெரிவித்தவை வருமாறு,
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது குறித்து குர்ஆனில் எதுவும் சொல்லப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் பேசி இருக்கின்றார். அவர் குரானை முழுமையாக படித்தார் என்று சொல்லி இருக்கின்றார்.
குர்ஆனை அவர் படித்ததாக சொல்வது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அவரால் அர்த்தங்களை விளங்கி கொள்ள முடியாமல் போய் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்கின்ற ஒன்றை இல்லை என்று வேண்டும் என்று இட்டு கட்டி பேசி இருக்க வேண்டும்.

குர்ஆனில் குறைந்தது 10 இடங்களில் மிக தெளிவாக ஜனாஸாக்களின் நல்லடக்கம் தொடர்பாக சொல்லப்பட்டு இருக்கின்றது. இது தொடர்பாக குறித்த அமைச்சருக்கு பாடம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அமைச்சரோடு இது தொடர்பாக எந்த இடத்திலும், எப்பொழுதும் நான் பகிரங்க விவாதம் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதால் எந்த தீங்கும் நேர்ந்து விட போவதில்லை என்கிற விடயத்தில் உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்க இலங்கை மாத்திரம் மாறுபட்டு நிற்கின்றது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்ற இந்த அடிப்படை உரிமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார ஸ்தாபனம், இஸ்லாமிய நாடுகள் என்று சர்வதேச சமூகமே இலங்கைக்கு எதிராக திரும்புகின்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. மூன்றாம் உலக போருக்கு இது இட்டு செல்லுமா? என்கிற சந்தேகம்கூட ஏற்பட்டு உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :