கிண்ணியாவில் வளர்ந்துவரும் பதனிடப்பட்ட கருவாட்டு வியாபாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.



எப்.முபாரக்-
மது கிண்ணியாவில் தோனா கடலோரப்பகுதிகளில் அமைந்திருக்கும் கருவாடு உற்பத்தியும் வியாபாரமும் சிறந்த முறையில் பிரதேச வருமானத்தை பெற்று தரும் வியாபாரங்களில் ஒன்றாகவும் மற்றும் நிறைய குடும்பங்களின் வாழ்வாதாரம் நிவர்த்தி செய்வதாலும் மேலும் அதை ஊக்குவிக்கும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் மீனவர்களுடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை (28) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

கருவாடு உற்பத்தி வியாபாரம் மேலும் மேம்படுத்தி நவீன முறைகளை தொழிலாளர்களுக்கு அறிமுகம் செய்து சிறந்த முறையில் அவர்களின் கடை கட்டங்களை நவீன முறையில் அமைத்து சிறந்த தரத்தை ஏற்படுத்துவதே காலத்தின் அவசர தேவையாக உள்ளது.

இந்த வியாபாரம் மிகவும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவர்ந்து வருவதால் இதை ஒரு சிறந்த முறையில் நிலைப்படுத்தி தொழிலாளர்களை ஊக்கி விப்பது கட்டாயம்.

இது சம்பந்தமாக கடலோர பாதுகாப்பு திணைக்களமும் costal conservation dept (CCD) சம்பந்தப்பட்டு இந்த வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இது சம்பந்தமாக நாம் பூர்வாங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :