கொழும்பு 15 இலக்கம் 582 அளுத்மாவத்தை வீதியில் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக புரவலர் பூங்கா நிறுவனர் ஹாசிம்உமர் பிரதம அதியாக பங்கேற்கிறார். சிறப்பு அதிதிகளாக நெய்னார் சமூகநல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், அஸிஸ் மன்றத் தலை வர் அஷ்ரப் அஸிஸ் மற்றும் கலை,இலக்கிய, ஊடகத்துறையை சார்ந்த முக்கியஸ் தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்போட்டியில் முதலாம் இடத்தை எம்.நிரோஷனும் இரண்டாம் இடத்தை எச்.எவ். றிஸ்னாவும் மூன்றாம் இடத்தை ஆர்.சுவஸ்திகாவும் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு ரூபா 5000,3000,2000 பணப்பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக மலையகத்தில் ‘ஊருக்கொரு நூலகம் அமைப் போம்’ என்ற செயல் திட்டத்தை வழிநடத்திவரும் மலையக மறுமலர்ச்சி ஒன்றியத் துக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment