சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளரும்,பன்னூலாசிரியருமான சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல் ஹக் காலமானார்.



பி.எம்.எம்.எ.காதர்-
லங்கையின் கலை,இலக்கியத் துறையிலும்,உடகத்துறையிலும் மிகவும் ஆழமாக தடம்பதித்த தென்கிழக்கின் முக்கிய ஆழுமைகளில் ஒருவர் சிரேஷ்ட ஊடகவியலாளரும்,பன்னூலாசிரியரும்,பிரபல எழுத்தாளருமான அகில இலங்கை சமாதான நீதவான் சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல் ஹக்(வயது 57)இன்று(25-01-2021)அதிகாலை 4.00 மணியளவில் ஏறாவூரில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த நிலையிலேயே இவர் உயிரிளந்துள்ளார்.ஆர்ப்பாட்டம் இல்லாமலும்,அமைதியாகவும் ஊடகப் பணியாற்றியவர்.சமூக சிந்தனையோடும், எதிர்கால நோக்கோடும் எழுதியவந்தவர்.

அரசியலையும்,ஆண்மீகத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியவர்.எழுத்துக்காக யாரிடமும் பணியாதவர்.எழுத்தை புனிதமாக மதித்தவர்.வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருந்து வழிநடாத்துகின்ற நல்ல பண்பைக்கொண்டுள்ள மனிதாபிமானமிக்கவர்.

எப்போதும் சமூகத்தைப் பற்றிய சிந்தனையோடு பயணிப்பவர்.மற்றவர்களின் நலனுக்காக தனது நலனை விட்டுக் கொடுக்கின்ற மனோபாவம் கொண்டவர்.இவரது படைப்புக்கள் இஸ்லாமிய சமயம் பற்றிய ஆய்வாகவும்,அரசியல் சார்ந்த விமர்சனமாகவும்,வரலாறுகளை ஆய்வு செய்யும் படைப்புக்களாகவுமே அமைந்திருக்கின்றது.அச்சமின்றி உண்மையின் பக்கம் நின்று தனது கருத்தைச் சொல்லும் திடகாத்திரம் இவரிடம் இருந்தது.

ஆடம்பரமின்றி எளிமையாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தவர்.எம்.எம்.எம்.நூறுல் ஹக்;.1964ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 27ஆம் திகதி சாய்ந்தமருதில் பிறந்த இவர் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.இதுவரை ஏழு நூல்களை வெளிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவரது ஊடகப்பணிக்காக அண்மையில்“வித்தகர்”விருது வழங்கி கௌரவித்தது.இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஏறாவூரில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :