மானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் ஆண்டாக தைத் திருநாள் மலரட்டும் - மொஹமட் உவைஸ் மொஹமட் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி



மினுவாங்கொடை நிருபர்-
தைப்பொங்கல் திருநாளை வரவேற்றுக் கொண்டாடும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும், எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றேன். விடைபெறும் ஆண்டு, விட்டுச் செல்லும் தடங்களில் பல துயரங்கள் நம் வாழ்வில் நிரம்பிக் கிடக்கின்றன. இத்துயரங்கள் யாவும் நீங்கி, பிறக்கும் தீபத் திருநாள் வருடத்தில், சிறக்கும் வாழ்வை யாவருக்கும் தொடட்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மொஹமட் உவைஸ் மொஹமட், தனது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலர்ந்துள்ள தைப்பொங்கல், இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வில் சமாதானம், செளபாக்கியம், சுபீட்சம் நிறைந்த ஆண்டாகத் திகழ வேண்டும். மானுட நல்லிணக்கத்திற்கு வழி காட்டும் புது வருடமாகவும் அமைய வேண்டும். அத்துடன், இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் "நாம் இலங்கையர்" எனும் உணர்வுடன் வாழ்வதற்கான சுபீட்சம் மிக்க ஆண்டாக மலர வேண்டும். இத்திருநாளிலிருந்து குரோதங்கள், மனக்கசப்புக்கள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் களைந்தெறிந்து, இன்றைய திருநாளைக் கொண்டாடுவதே, நாம் புரியும் மிகப் பெரும் நன்மையான கைங்கரியமாகும்.
உலகமெல்லாம் தலை விரித்துத் தாண்டவமாடும் கொவிட் - 19 உடைய தாக்கம் எம்மை விட்டும் இன்னும் இன்றும் அகலாத நிலையில், 2020 ஆம் ஆண்டு எம்மை விட்டும் பிரிந்து சென்று, 2021 ஆம் ஆண்டு எம்மத்தியில் மலர்ந்து நிற்கின்றது. இத்தருணத்தில், மனித குலம் இன்று வேண்டி நிற்கும் அன்பு, கருணை, மனித நேயம், சுகாதார வாழ்வு உள்ளிட்ட பாக்கியங்களை, முழு மனித சமுதாயமும் அனுபவித்திட, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்.
"எமது நாடு சுபீட்சம் அடைய வேண்டும். தேசிய சக வாழ்வு, எல்லா மக்களிடமும் உருவாக வேண்டும்" என்ற நல்லெண்ணம் எம்மிடையே வரவேண்டும்.
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் சந்தோஷம், சமாதானம், செளபாக்கியம் மிகுந்த ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :