முஸ்லிம்களை வைத்து காய் நகர்த்தும் பெரும்பான்மை அரசியல். இதில் முஸ்லிம் தலைவர்கள் பகடை காயாக இருக்க முடியாது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் தெரிவிப்பு.



எப்.முபாரக்-
முஸ்லிம்களை வைத்து காய் நகர்த்தும் பெரும்பான்மை அரசியல். இதில் முஸ்லிம் தலைவர்கள் பகடை காயாக இருக்க முடியாது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(26) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

இன்று இலங்கையின் அரசியல் நிலவரம் முஸ்லிம்களை வைத்தே பெரும்பான்மை பிரதான கட்சிகளும் பெரும்பான்மை இனவாத சிரிய கட்சிகளும் தங்களது சுயஅரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.

இதில் தற்போதைய ஆளும் தரப்பு முஸ்லிம்களை வெறுத்த தன்மையை பெரும்பான்மை சமூகத்திற்கு காட்டி முஸ்லிம்கள் எமது விரோதிகள் என சித்தரித்து வருகிறது.
மாறாக எதிர்கட்சியாக இருக்கும் பெரும்பான்மை கட்சி முஸ்லிம் அரசியல் தலைவர்களை தம்வசம் வைத்து அவர்கள் எதிர்கட்சியை பலப்படுத்தி வரும் இதே வேலை பெரும்பான்மை சிறிய இனவாத கட்சிகள் முஸ்லிம்களை பயங்கரவாதியாக சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் சக்தி இழந்து போகும் அபாயம் ஏற்பட்டு வருவது அவதானிக்க முடிகின்றது.
இந்த கட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் சக்தி பெற்று ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும் என்பது காலத்தின் தேவையாய் உள்ளது.

இதன் அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் ஒன்று இணைந்து ஒரு கூட்டாக செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் தேசிய விடுதலை மக்கள் முன்னணி மிகவும் தெளிவாக உள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :