கிழக்கு மாகாணப்பணிப்பாளர் பத்மராஜா நேரில் வந்து சுமுக தீர்வு! மக்கள் மகிழ்ச்சி : பொறியியாளர்கள் உறுப்பினருக்கும் நன்றிதெரிவிப்பு



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனையில் நீண்டகாலமாக இழுபட்டுவந்த வீதிப்பிரச்சினையொன்றை கிழக்குமாகாண வீதி ஜ திட்டத்திற்குரிய மாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர் ரி.பத்மராஜா நேரில் வந்து சுமுகமாக தீர்த்துவைத்தார்.கல்முனை உடையார்வீதி அம்மன்கோவில் வீதி முதலான வீதிகளில் நிலவிய வடிகான் பிரச்சினை நேற்று தீர்த்துவைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஐ திட்டத்தின் கீழ் வீதி அமைப்பு திட்டத்தில் கல்முனையில் உடையார் வீதியும் உள்ளடங்கியுள்ளது. இவ்வீதியில் குறிப்பிட்ட பகுதிக்கான வடிகான் பீலி வடிகானாக அமைக்கப்பட்டிருந்தது இதனை மாற்றி இந்த இடத்திற்கு பொருத்தமான யு வடிகானை அமைக்குமாறு பொது மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.குறித்த வீதி தொடர்பான கோரிக்கையை மக்கள் முன்வைத்திருந்த வேளை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சில தினங்களுக்கு முன்னர் குறித்த திட்டத்திற்கான பொறியலாளர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து தெரியப்படுத்தியிருந்தார்.அதில் தீர்வுகாணப்பட்டிருந்தது.
இருந்தும் உறுப்பினர் ராஜன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மாகாணப்பணிப்பாளர் உரிய ஸ்தலத்திற்கு வந்து நேரடியாக பார்த்து முன்னர் எடுத்த அதே தீர்வை பெற்றுக்கொடுத்தார்.

அத்தருணம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஐ திட்ட மாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர் ரி.பத்மராஜா மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள ஐ திட்ட பொறியியலாளர் பி.பரதன் நிபுணத்துவசேவையின் வதிவிடப்பொறியியளார் எஸ்.எ.சபீக் ஆகியோர் உரிய இடத்திற்கு விஜயம் செய்து மக்களின் கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து கலந்துரையாடி அதற்கான தீர்வு தொடர்பாக உறுதியளித்திருந்தனர்.

மழை காலத்தில் வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய வகையில் வெள்ளம் தேங்கி நிற்காதவாறு வீதி அமைக்கப்படும் இடத்தில் அதற்கேற்ற வகையில் யு வடிகான் அமைப்பதாக உறுதியளித்திருந்தனர்.

இவ்விடத்தில் கல்முனை மின்சார சபை பிரதி பொறியியலாளர் வி.ரி சம்பந்தன் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் கே.சிவலிங்கம் மற்றும் குறித்த வீதியில் வசிக்கும் பொது மக்களும் சமூகமளித்திருந்தனர்.குறிப்பிட்ட வடிகான் அமையும் இடத்தில் உள்ள மின்கம்பங்களை இடமாற்றுவது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை எழுத்து மூலம் கோரிக்கை கடிதத்தை மின்சார சபைக்கு வழங்குகின்றபோது அதற்கான எற்பாட்டை செய்வதாகவும் கல்முனை மின்சார சபை பிரதி பொறியிலாளர் வி.ரி.சம்பந்தன் திட்ட பொறியியலாளர்களிடம் தெரிவித்தார்.
குறித்த பிரச்சினையை தீhத்துவைத்தமைக்காக மக்கள் மகிழ்ச்சியடைந்து பொறியியாளர்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினருக்கும் நன்றிதெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :