இன்று கொரோனாப்பீதியால் காரைதீவில் பாடசாலைகள் வெறிச்சோட்டம்!



வி.ரி.சகாதேவராஜா-

காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் இருமாணவர்கள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து இன்று(26)செவ்வாய்க்கிழமை காரைதீவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மாணவரின்றி வெறிச்சோடிக்காணப்பட்டன.

800க்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட சண்முகா மகா வித்தியாலயத்தில் நேற்று ஆக 07மாணவர்களே சமுகமளித்திருந்ததாக பதில்அதிபர் சீ.திருக்குமார் தெரிவித்தார். அதேபோன்று விபுலாநந்தா மத்திய கல்லூரியில் 69மாணவர்களே சமுமளித்திருந்தனர். அநேகமான பாடசாலைகளில் 10வீதத்திற்கும் குறைவான மாணவர்களே வந்திருந்தனர்.ஆசிரியர்களும் குறைவாகவே காணப்பட்டனர்.

சண்முகாவில் இருமாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர்களோடு நெருங்கப்பழகிய 32மாணவர்களுக்கு பிசிஆர் சோதனை நடாத்தப்பட்டது. மேலும் தொற்று இனங்காணப்பட்ட தாதியஉத்தியோகத்தர் அவரது பிள்ளைகள் அனைவருக்கும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் சோதனை நடாத்தப்பட்டது.பிள்ளைகளுக்கு தற்சமயம் தொற்றுஇல்லை. எனினும் பிசிஆர் முடிவு கிடைத்தபிற்பாடு அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறியலாம்.

மாணவரிடையே கொரோனா தொற்று அதனைத்தொடர்ந்த பிசிஆர் சோதனைகள் அனைத்தும் பெற்றோரிடையேயும் மாணவரிடையையும் அச்சத்தை தோற்றுவித்ததே மாணவர் வரவுகுறைவுக்கான காரணமாகும்.

பாடசாலைகளுக்கு எம்ஓஎச் விஜயம்.

இதேவேளை காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் நேற்று காரைதீவிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து அவதானித்தார். வகுப்பறைகளுக்கும் சென்று ஆசிரியர் மாணவர்களுடன் அளவளாவினார்.

கொரோனா பற்றி வீணாகப்பயப்படவேண்டாம் என்று நம்பிக்கையூட்டியஅவர் சுகாதாரநடைமுறைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியத்தை பவ்யமாக எடுத்துக்கூறினார்.

விபுலாநந்தா மத்திய கல்லூரிக்கும் சென்ற அவர் அங்கு ஏலவே தொற்றுக்குள்ளான தாதியஉத்தியோகத்தரின் பிள்ளை இருப்பதாலும் அவரோடு சம்பந்தப்பட்ட பிள்ளைகள் இருப்பதனாலும் க.பொ.த. உயர்தர விஞ்ஞானப்பிரிவை ஒருவார காலத்திற்கு மூடுவதற்கும் அதனோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார்.

ரியுசனுக்கும் தடை!
காரைதீவில் கொரோனாப்பரவல் மாணவர் மத்தியில் இனங்காணப்பட்டிருப்பதனால் மறுஅறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இது தொடர்பாக ஊர்பூராக ஒலிபெருக்கியூடாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல 4 அல்லது 5 மாணவர்களைச்சேர்த்து வகுப்பு நடாத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


நீண்ட காலத்திற்குப்பிற்பாடு இவ்வாரமே மாணவர் வரவு கணிசமானளவு அதிகரித்து வந்தது. கற்றல் கற்பித்தல் செயற்பாடும் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் இப்படியான துர்ப்பாக்கியநிலை தோன்றியிருப்பது கவலைக்குரியது.இதனையும் வெற்றிகொண்டு கல்விச்சூழலை வழமைக்குக்கொண்டுவர அனைவரும் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்கவேண்டும் என கல்வியியாளர்கள் சமுகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மரணவீடு திருமணவீடு ஆலய விழாக்கள் மற்றும் பண்டிகைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதாரதுறையினரின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளவும் பொதுமக்கள் பூரண ஒத்ததுழைப்பை வழங்கவேண்டுமெனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :