”நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக, அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமான நிகழ்வு.



அட்டாளைச்சேனை பைஷல் இஸ்மாயில் –
2021 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமான நிகழ்வு இன்று (01) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
”நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக, ஒரே நாட்டில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும், சமத்துவத்துடனும், ஒருமித்த மனதுடன், சகோதர மனப்பான்மையுடன் பொதுமக்களுடன் அன்பாகப் பழகுவதுடன், சேவை நாடி வருகின்ற பொதுமக்களுக்கு தாமதம் ஏற்படாமல் அவர்களுடைய தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க ஒவ்வொருவரும் திட சங்கற்பம் கொள்ள வேண்டும் என்று அரச ஊழியர்கள் அனைவரும் உறுதியுரை எடுத்து சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்கள்.
வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடி உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :