இலங்கை கிரிக்கட் சபையின் ஸ்கோரர்களாக (Scorers) மூதூர் யூ.டி.பி.எம் (UDPM) அங்கத்தவர்கள் மூவர் தெரிவு....



ஹஸ்பர் ஏ ஹலீம்-
லங்கை கிரிக்கட் சபையினால் கடந்த 2020 இல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கிரிக்கட் புள்ளிக்கணிப்பாளர் (Scorers) தேர்வில் மூதூர் யூ.டீ.பீ.எம் (UDPM) அங்கத்தவர்களான . சிஹான் சுஹூட், . அப்துல் லத்தீப் பர்ஸாத் மற்றும் அப்துல் ஹுதா பிஸ்ருல் ஹாபி ஆகியோர் கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பரீட்சையானது 2020 தாம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம், குருநாகல் வெலகெதர மைதானங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேற்படி பரீட்சையானது கிரிக்கட் புள்ளிக்கனிப்பின் மனுவல் மற்றும் ஆன்லைன் (Manual Scoring & Online Scoring) ஸ்கோரிங்க் ஆகியவற்றினை உள்ளடக்கியதாகும். திருகோணமலை கிரிக்கட் வரலாற்றில் இலங்கை கிரிக்கட் சபையின் அங்கீகாரம் பெற்ற ஸ்கோரர்ஸ் தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும். மாவட்டத்தில் மொத்தம் 09 பேர் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை மூதூரில் இருந்து மூவர் தெரிவாகி உள்ளமையானது மூதூர் கிரிக்கட்டின் ஒரு மைல்கல் ஆகும்.

இலங்கை கிரிகட்டின் பெனல் நான்கின் நடுவரும், மூதூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், மூதூர் வெஸ்டன் வோரியஸ் அணியின் தலைவரும் மற்றும் UDPM அமைப்பின் நடுவர்கள் பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் சுகூத் அவர்கள் இலங்கை கிரிக்கட் ஸ்கோரராக 29-01-2021 அன்று திருகோணமலை கிரிக்கட் சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இலங்கை கிரிகட் ஸ்கோரர்கள் அதிகாரிகளினால் சான்றிதலைப்பெற்றுக்கொண்டார். அதேபோன்று

இலங்கை நடுவர்கள் சம்மேலனத்தின் நடுவரும், மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழையமாணவரும், மூதூர் நடுவர்கள் அபிவிருத்தி மற்றும் பயிற்றுவிப்பு அமைப்பின் (UDPM) தலைவரும், மூதூர் யங் லயன்ஸ் அணியின் தலைவரும், மற்றும் வெஸ்டன் வொறியஸ் திருமலை மாவட்ட அணிக்கான வீரரருமாகிய அப்துல் லத்தீப் பர்ஸாத் அவர்களும் அன்றைய தினத்தில் தனது சான்றிதலைப்பெற்றுக்கொண்டார். மேலும்

அதேதினத்தில் இலங்கை நடுவர்கள் சம்மேலனத்தின் நடுவரும், மூதூர் மத்திய கல்லூரியின் பழையமாணவரும், மூதூர் வெஸ்டன் வோறியஸ் அணியின் தெரிவுக்குழு தலைவரும் மற்றும் UDPM அமைப்பின் அங்கத்துவருமாகிய அப்துல் ஹுதா பிஸ்ருல் ஹாபி அவர்களும் இலங்கை ஸ்கோரர்ஸ் அதிகாரிகளால் நியமனக்கடித்தினையும் மற்றும் சான்றிதலையும் பெற்றுக்கொண்டார்.
மேற்படி மூதூர் சார்பாக தெரிவாகிய மூவருக்கும், திருகோணமலை மாவட்டம் சார்பாக தெரிவாகிய ஒன்பது புள்ளிக்கணிப்பாளர்களுக்கும் Umpire Development Panel Of Mutur சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :