தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரி மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானா அவர்களின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மருதமுனை பளீல் மௌலான பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று (25.02.2021) மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ. எல். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட மெய்யியல் துறை விரிவுரையாளர் ஏ. ஜே .எம் வஸீல் பளீல் மௌலானா அவர்கள் கல்வித் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து விசேட உரையை நிகழ்த்தினார்.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் வரலாற்றில் 08 வது அதிபராக பொறுப்பேற்ற மர்ஹூம் பளீல் மெளலானா அவர்கள் அப்போது ஸ்ம்ஸ் இல் மகா வித்தியாலயமாக இப்பாடசாலை தரம் உயர்த்தப்பட்ட பொழுது 1978 ஆம் ஆண்டு பாடசாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்த புகைப்படம் காட்சிப்படுத்துவதற்கு ஏற்றால் போல் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம். எம். ஹிர்பகான், பளீல் மௌலானா பவுண்டேஷனின் தவிசாளரும் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம் அஹமது அன்சார் மெளலானா, பிரதித் தலைவரும் விரிவுரையாளருமான அல்- இஹ்சான் ஹசன் மெளலானா, செயலாளர் திருமதி இம்திஸா ஹசன், பொருளாளர் எம். எல். எம். ஜமால்தீன் உட்பட பளீல் மௌலானா அவர்களின் குடும்பத்தினர் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment