கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்தினால் கலைஞர் சுவதம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை காலமும் தெரிவு செய்யப் படாத 10 கலைஞர்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில்
இன்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப் பட்டன.
ஒவ்வொரு வருடமும் கலைஞர்கள் இருக்கும் இல்லங்களுக்கு சென்று அன்பளிப்பு பொருட்களை வழங்கி அவர்களை கௌரவித்துடன் கொவிட்19 காரணமாக இன்று பிரதேச செயலகத்தில் இந் நிகழ்வு இடம் பெறுவதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப் பட்ட தேசிய கலைஞர் அடையாள அட்டையினை ஊடகவியலாளர் எம்.ஏ முகம்மதுக்கு பிரதேச செயலாளர் இதன் போது வழங்கிவைத்தார்
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி,நிர்வாக உத்தியோகத்தர் திருமதி தவநாதன்,கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் எஸ். சுகுணன்,கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் லலிதா தேவி,
முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் ஆர்.நிம்சாட்,
இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் சுகன்யா மகா தேவா மற்றும் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment