திருகோணமலை கிண்ணியா அக்ஸரியன் சப்பர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்லரும் 19ஆம் திகதி எழிலரங்கு மைதானத்தில் ஆரம்பம்



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா அக்ஸரியன் சுப்பர் லீக் 2021 ஆம் ஆண்டுக்கான உதை பந்தாட்ட முதலாவது சுற்றுப் போட்டி எழிலரங்கு மைதானத்தில் எதிர்வரும்19ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 22ஆம் திகதி முடிவடையும் என அதன் ஸ்தாபகரும் உடற் கல்வி ஆசிரியருமான ஏ.எல் .எம்.நபீல் தெரிவித்தார்.
அக்ஸரியன் சுப்பர் லீக் அங்குரார்ப்பணம் மற்றும் ஊடக மாநாடு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் அண்மையில் லீக்கின் தலைவர் ஏ.பௌமி தலைமையில் இடம் பெற்ற போது இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அதன் ஸ்தாபகர் மேலும் குறிப்பிடுகையில் இச் சுற்றுப்போட்டிக்கு யு .என்.வி பௌண்டேஷனின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் பிரதான அணுசரனை வழங்குகின்றார்.இப் போட்டிகள் அனைத்தும் இரவு போட்டிகளாக நடை பெறவுள்ளன.

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கியதாக அக்ஸரியன் சுப்பர் லீக் உருலாக்கப் பட்டது.இவ் வீரர்களை கௌரவப் படுத்துவதற்காக இது உருவாக்கப் பட்டது.
.
இப் போட்டியில் அக்ஸரியன் புழு ஈகிள்,அக்ஸரியன் யுபிட்டர்ஸ், அக்ஸரியன் பிலக் பெண்டர்,அக்ஸரியன் ரசிங் ஸ்டார்,அக்ஸரியன் சுப்பர் பைடர், அக்ஸரியன் சுப்பர் போயிஸ்,அக்ஸரியன் சுப்பர் கிங்ஸ்,அக்ஸரியன் போரியஸ் ஆகிய,8 அணிகள் பங்கு பற்றவுள்ளன.
.
இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஐம்பதாயிம் ரூபாவும் வெற்றி கிண்ணமும்,இரண்டாவது அணிக்கு நாற்பதாயிரம் ரூபாவும்,மூன்றாவது அணிக்கு முப்பதாயிர்ம் ரூபாவும்,நான்காவது அணிக்கு இருபதாயிரம் ரூபாவும்,இதர அணிக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் வழங்கப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போட்டி ஆரம்பமாகும் 19ஆம் திகதியன்று அல் அக்ஸா பாடசாலை வீதியிலிருந்து நடை பவணி ஆரம்பமாகி எழிலரங்கு மைதானம் வரை சென்றடையும்.ஆரம்ப நிகழ்வுக்கு திருகோணமைல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பங்கு கொள்வார்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு
வழங்கப்படவுள்ள வெற்றிக் கேடயம் அறிமுகப் படுத்தப் பட்டது. பங்கு பற்றும் அணித் தலைவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களிலான பெச்சினை அதிதிகளினால் அணிவிக்கப் பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :