கிழக்கில் 258 நிலையங்களில் 14 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணி ஆரம்பம்...


விரி. சகாதேவராஜா-

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் சுகாதார துறைசார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் மொத்தமாக 14010 கொரணா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு 258 நிலையங்கள் ஊடாக ஏற்றும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதில் கல்முனைப்பிராந்தியத்திற்கு 4870 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் முதல்நாள் 998தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாகவும் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்தியத்தில் நேற்று 30ஆம் திகதி ஆரம்பமான கொரோனா தடுப்பூசி வழங்கலின் கணக்கு விவரங்களின் படி நாவிதன்வெளி- 29
கல்முனை தெற்கு -144 
சாய்ந்தமருது-  50 
காரைதீவு -50
நிந்தவூர்- 29
அட்டாளைச்சேனை- 170
அக்கரைப்பற்று -40 
ஆலையடிவேம்பு -72
திருக்கோவில்- 40
பொத்துவில்- 80 
இறக்காமம் -30
சம்மாந்துறை -20
கல்முனை வடக்கு -264 
என்ற வீதத்தில் முதல்நாளில் ஏற்றப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாட்டத்திற்கு 3400 தடுப்பூசிகளும் அம்பாரைக்கு 3070 தடுப்பூசிகளும் கல்முனைக்கு 4870 தடுப்பூசிகளும் திருகோணமலைக்கு 2670 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கப்பட்ட 3400 கொரணா தடுப்பூசிகள் அனைத்தும் 14 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள்இ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட 37 வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உழியர்கள் உள்ளடங்கலாக பகிர்ந்தளிக்கப்பட்டு அவற்றினை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :