60 வது திருமலை சாரணர் குழு சண்முக இந்து மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள குருதிக்கொடை முகாம் சனிக்கிழமை 2021.02.06 காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது.
ஜனாதிபதி சாரணர் விருதினை பெற்றுக் கொள்வதற்காக சாரணர் செல்வி ஹம்சாயினி சந்திரவதனன் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
கடந்த காலங்களில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 9 சாரணர்கள் ஜனாதிபதி சாரணர் விருதினை பெற்றிருந்தனர்.
கல்லூரி அதிபர் திருமதி லிங்கேஸ்வரி ரவிராஜ் மாவட்ட சாரணர் ஆணையாளர் சி.சசிகுமார் ஆகியோர் இக் குருதிகொடை முகாமினை ஆரம்பித்து வைத்தனர்.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பழைய மாணவரும் பெற்றோருமாகிய எஸ்.சதீஸ்குமார் தனது 25வது குருதிவழங்கலை இங்கு மேற்கொண்டிருந்தார் என்பதும் விசேடமாகும்.
0 comments :
Post a Comment