தம்பலகாம பிரதேச செயலக 73 ஆவது சுதந்திர தின வைபவமும் மரநடுகையும்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
லங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாகவும் சுதந்திர தின வைபவம் இன்று (04) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் மரநடுகை வைபவமும் இடம் பெற்றது. இதில் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் நூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இடம் பெற்றதோடு சமூக சேவைகள் பிரிவின் மூலமாக விசேட தேவையுடையோர்களும் கலந்து கொண்டதோடு மரங்களை நட்டு வைத்தார்கள். தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் வளாகத்திலும் டாக்டர் ஜீவராஜ் அவர்களின் பங்குபற்றலோடும் மரக் கன்றுகள் நடப்பட்டன. விசேடமாக இளைஞர் யுவதிகளூம் குறித்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து தேசிய கொடியை ஏந்தியவாறு மரங்களை நட்டு வைத்ததுடன் வீதி ஊர்வலத்திலும் ஈடுபட்டார்கள்.

இவ் நிகழ்வில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் பி.சுதன் உட்பட பல உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :