கல்முனை பிராந்தியமும் முஸ்லீம் கொரோனாவும்- மர்மம் துலங்க வேண்டும்..!

ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இதுவரை சுமார் 05 வைத்தியர்களுக்கு கொறோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் 05 பேரும் முஸ்லிம் வைத்தியர்கள் ஆவர்.

அண்மையில் இனங்காணப்பட்ட இவர்களில் மூவர் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கொறோணா சிகிச்சை நிலையத்திற்கும் இருவர் பாலமுனை யிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயம் அறியக்கூடியதாக உள்ளது.

ஏன் இந்த கொறோணா அங்குள்ள வைத்தியர்களில், முஸ்லிம்களை மாத்திரம் தொற்றியுள்ளது என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

இதில் கவலையான விடயம் யாதெனில்,
சுகாதார சேவையில் உள்ளவர்களுக்கு கொறோணா தொற்று ஏற்படும் பட்சத்தில், அதனை இனங்காணல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் 2020/04/03இல் வெளியிடப்பட்ட EPID/400/2019/n-Cov என்ற சுற்றுநிரூபத்தின் அடிப்படையில், இவர்களுக்கு வீட்டு சுய தனிமைப்படுத்தல் முறையில் இருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் மறுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களும் சாதாரன பொதுமக்கள் போன்றே சிகிச்சை பெற வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை கவலை தரும் விடயமாகவே உள்ளது.

இந்த அடிப்படையில், இங்கு ஏன் முஸ்லிம் வைத்தியர்களுக்கு மாத்திரம் கொறோணா வந்துள்ளது? எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? இதனால் அங்குள்ள ஏனைய உத்தியோகத்தர்கள் பாதிக்கப்படவில்லையா? என்பது ஆராயப்பட வேண்டும்.

இவ்வாறு கொறோணா தொற்றிய இவ்வைத்தியர்கள் ஏன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் சுற்றுநிரூபத்திற்கிணங்க வழிநடத்தப்படவில்லை? இவர்கள் இவ்வாறு வழிநடாத்தப்பட்டமைக்கான பின்புலக் காரணம் என்ன என்பது பற்றியும் ஆராயப்படல் வேண்டும்.

இவ்வாறான மர்மம் துலங்குமா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :