விவசாய இராஜாங்க அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் ஒழுங்கு செய்துள்ள "குழந்தைகளுக்கான மரத்தோட்டம் " தேசிய மரநடுகை வேலைத்திட்டம் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி யில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பகுதித் தலைவர் எஸ் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார் பிரதம அதிதியாகவும், களுவாஞ்சிக்குடி விவசாய விரிவாக்கல் காரியாலய விவசாய போதனாசிரியர் என்.லட்சுமணன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
ஆரோக்கியமான வாழ்விற்கு 200 கிராம் அன்றாடப் போசணைக்கான இலக்கினை பூர்த்தி செய்யும் பாரிய பணியில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment