கொலை செய்யப்பட்ட நிலையில் அம்பாறை - தமன பகுதியில் தாயும் மகனும் மீட்பு



பாறுக் ஷிஹான்-
வீடொன்றில் கொலை செய்யப்பட்ட தாயும் அவரது 13 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கூரிய ஆயுதம் ஒன்றை பொலிஸார் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவமானது அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த கால யுத்தத்தில் ராணுவ அதிகாரியான கணவனை இழந்த இப்பெண் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு நபர் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வந்து அந்த பெண்ணுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து மது அருந்தியதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ தினம் சந்தேக நபர் இறந்த பெண்ணின் தாயை தொலைபேசி ஊடாக அழைத்து திட்டியுள்ளார்.பின்னர் இறந்த பெண் தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை பிரஸ்தாப நபர் துன்புறுத்துவதாகவும் இதனால் மகனை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது என கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இறந்த பெண்ணின் தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்டார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண் இறந்த பெண்ணின் மகனை பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால் விசாரிக்கச் சென்றுள்ளார்.

இதன் போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது தாயும் மகனும் வெட்டுண்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொறுப்பதிகாரி பிரியந்தா பண்டார சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும் குறித்த கொலை குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் தமணை பொலிஸ் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் கொலையாளியைத் தேட பொலிஸ் நாய்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன் கைரேகைகள் தடயங்கள் கறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தப்பி சென்றதாக கூறப்படும் சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்ற அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவர் திஸ்ஸமஹராமாவில் வசிப்பவர் என போலீசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் இறந்தவர் பி.ஜி. தினேஷிகா சதமாலி குலரத்னே (33) அவரது மகன் எஸ்.ஏ.ஸ்ரீமல் சச்சீந்திர லக்ஷன் ரூபசிங்க (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கரின் அறிவுறுத்தலுக்கமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :