இராணுவ மயமாக்கலுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.-எஸ்.எம்.மரிக்கார்



ராணுவ மயமாக்கலுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் ஏனனில் அரசாங்கத்தை விட இன்று சிவில் சமூகம் விழிப்பாக இருக்கிறது. என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இன்று (01) எதிர் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியல் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்,

நாட்டுப்பற்றுடன் தேசியமயமான நிலையில் அதனை முன்னிலைப்படுத்தி தேசியத்தைப் பாதுகாப்பதாக,தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும் தேசிய உற்பத்தி வளர்ச்சியை அபிவிருத்தி செய்து இறக்குமதியில் தங்கியில்லாத ஒர் பொருளதார திட்டத்தை கட்டியெழுப்புவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம்,ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் மிச்சமுள்ளது வெறும் வெற்றுப் பேச்சு மாத்திரம் தான் என்று இன்று மக்கள் கூறுகின்றனர். கிராமப்புற தேனீர் கடை போன்று தான் இன்றைய அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்குவது தேசிய உற்பத்தியை மேம்படுத்துவதாக அமைகிறதா? தேசியத்தை பாதுகாப்பதாக அமைகிறதா? தொழிற்சங்கம் கூறுவது போன்று இது முற்றிலும் தேசிய செத்துக்களை விற்கும்,நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒர் நிலைப்பாடாகும் என்ற அந்த நிலைப்பாட்டில் தான் நாங்களும் இருக்கிறோம்.

இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு எவ்வாறு இதை வழங்க முடியும்? G2G (இரு அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம்)என்ற அடிப்படையில் என்றால் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தையும் அதானி நிறுவனத்தை பெயரிட்ட குறிப்புகளையும் ரோஹித அபேயகுணவர்தன கான்பிக்க வேண்டும்.அவ்வாறு இல்லை என்றால் (அரச தனியார் முயற்சியான்மை) முறையில் இதை கொண்டு செல்வதென்றால்,விலை மனுக்கள் கோராமல் அதானி நிறுவனத்தை மாத்திரம் பெயரிட்டு முன்கொண்டு செல்வது எவ்வாறு என்பதை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும். G2G இல்லாமல் PP முறைமையில் இதை கையாள்வது என்றால் இதன் பின்னனியில் பாரிய கொமிஸ் பாரிய கொள்ளை இடம் பெறுவதான சந்தேகம் உள்ளது.அவ்வாறு இல்லாமல் G2G என்றால் இந்திய அரசாங்கம் அதானி நிறுவனத்தை பெயரிட்டதைக் காட்டுங்கள்.

அடுத்த விடயம், 51 வீதம் இலங்கைக்கும் 49 வீத பங்கு தான் இந்தியாவிற்கு என்றால் 49 வீத பக்காளருக்கு எவ்வாறு இதன் ஆளுகையை வழங்குவது? இதிலுள்ள டீல் என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும்.அரச துறையிலும் சரி, தனியார் துறையிலும் சரி கூடுதல் பங்குள்ளவர்கள் தான் ஆளுகைக்கு உரித்துடையவர்கள்.51 % பங்குள்ள துறைமுக அதிகார சபைக்கு வழங்காமல் 49 % வீத பங்குள்ள அதானிக்கு வழங்குவதன் மூலம் அதானி இந்தியாவில் நிர்மானிக்கும் துறைமுகத்தையும் நோக்கும் போது கொழும்புத் துறைமுகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை எதிர் காலங்களில் சந்திக்கும்.

அடுத்த விடயம்,மேற்கு முனையம் வழங்கப்படிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு எனில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உள்ள ஒப்பந்தத்தின் மூலம் அரச தனியார் கூட்டு முயற்சியான்மை மூலம் தான் மேற்கொள்ள முடியும், அவ்வாறு மேற்கொள்ளும் போது பகிரங்க விலை மனுக்கோரல் இடம் பெற வேண்டும்.பாரிய இலாபம் பெறும் ஒர் தேசிய செத்து.எனவே இது போன்ற ஒர் செத்தை விற்பதற்கு எங்களுடைய எதிர்பை தெரிவிக்கிறோம்.காலி முகத்திடலுக்குச் சென்று முன்னாலும் பின்னாலும் பர்த்தால் சகலதையும் விற்று விட்டவர்கள் மீதமுள்ள கிழக்கு முனையத்தையும் வடக்கு கொள்கலன் முனையத்தையும் விற்பதில் ஆச்சரியம் இல்லை.

பாரிய துரோகம் இழைக்கும் அரசங்கமாக இது அமைந்து காணப்படுகிறது.தொழிற் சங்கத்துடன் நோரடியாக நாங்கள் கைகோர்ப்பதற்கு பின்னிற்க மாட்டோம் என்பதை கூறுகிறோம்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று தேறிய மாணவர்கள் பலர் இருக்கின்றனர். கொழும்பு மாவட்டத்தில் தகுதி காண் புள்ளி 191,192,193 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல மாணவர்களுக்கு கொழும்பு பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.எனவே இந்த தகுதி காண் எண்களை குறைக்குமாறு பொற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கோரிக்கை விடுக்கும் பலர் கொழும்பு புறநகர மக்களாகும். எப்படியாயினும் கொழும்பு மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததால் இதை குறைக்கமாட்டார்கள்,என்றாலும் கோரிக்கையை முன்வைப்பது புறநகர 69 இலட்சம் வாக்களித்த மக்களாகும். எனவே அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தி மனிதாபிமானமாக நடந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இராணுவமயமாக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் ஏனனில் அரசாங்கத்தை விட இன்று சிவில் சமூகம் விழிப்பாக இருக்கிறது.

கொவிட் விடயத்தில் இந்த அரசாங்கம் விஞ்ஞான ரீதியான முறைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மாயைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறுதியில் நகைப்புக்கிடமாகி இன்று விஞ்ஞான ரீதியான தடுப்பூசிகளை பயன்படுத்தும் நிலைக்கு காலம் தாழ்த்தியோனும் வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.ஒரு ஊடகம் மாயையான பானியை அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தி,
சமூகமயப்படுத்தியது.இன்று வெட்கம் இல்லமால் ஆடை அணிந்தா தடுப்பூசி குறித்துப் பேசுகிறீர்கள் என்று அந்த ஊடகத்திடம் கோட்கிறேன்.

வறிய மக்களின கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இலத்திரனியல் சாதனங்களை பெறுவதற்குரிய வசதியற்ற பல பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் பல இருக்கின்றன. பொற்றோர்களிடம் பணம் இல்லை. வருவாய் இல்லை.தொடராக டேடா காட் வாங்க போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே முறையான திட்டமிடலுடன் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :