அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகம் குறுகிய காலத்தில் சமூகப்பணிகளில் சாதனை- எம்.ஐ.அஸ்வர் ஜீஎஸ்

அஸ்ரப் கான்-
ல்-நஜா விளையாட்டுக் கழகம் குறுகிய காலத்தில் அதிகமான சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அக்கழக உறுப்பினர்கள் சமூகத்தின் நலன்கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.அஸ்வர் தெரிவித்தார்.


அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் நேற்று (28) கழகத்தின் தலைவர் எஸ்.இத்ரீஸ் தலைமையில் நஜா விளையாட்டுக் கழகத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்.

அல்-நஜா விளையாட்டுக்கழகம் இந்தப் பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இக்கழகத்தின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது அல்-நஜா விளையாட்டுக்கழகம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களை அடையாளங்கன்டு, அவர்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்களை வழங்கியது.

அதுமாத்திரமல்ல இரத்ததான நிகழ்வுகள், பொதுச் சிரமதானங்கள், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கள் என பல்வேறு பணிகளை செய்து இப்பிரதேச மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளது. மேலும் ஜனாஸா வீடுகளுக்கு குளிப்பாட்டும் தட்டு, கதிரைகள், தகரக்கூடாரங்கள் என்பவற்றை இலவசமாக வழங்கும் சேவையினையும் இக்கழகம் ஆரம்பித்துள்ளது.

இக்கழகத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் அதன் நிருவாகத்தினரின் கடின உழைப்புமே பிரதான காரணமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது (2021/2022) ஆண்டுக்கான புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெற்றது.

தலைவர் - எஸ். இத்ரீஸ்
செயலாளர் - ஏ.ஆர்.றஹீம் (ஹசன்)
பொருளாளர் - ஏ.ஆர்.றிம்சான்
உபதலைவர் - எஸ்.எல்.முஸம்மில்
உபசெயலாளர் - எச்.எம்.இஸ்ஸடீன்
முகாமையாளர் - ஏ.எல்.றிம்சான்

நிருவாக உறுப்பினர்கள் -
ரீ.எல்.ஐனுடீன்
ஐ.எல்.றமீஸ்
எம்.பி.கியாஸ்
எச்.ஹாபில்
ஏ.ரி.றியாஸ்

விளையாட்டு அணிகளுக்கான தலைவர்கள்
கிரிக்கெட் - ஏ.எச்.எம்.றிஸ்கான்
எல்லே - ஏ.அஸீம்
கரப்பந்து - எச்.ஏ.பர்சாத்
உதைப்பந்து - வை.நிதாஸ்
கபடி - ரீ.எல்.பயாஸ்
மெய்வல்லுநர் - ஏ.எம்.றிஸ்வான்

கணக்காய்வாளர்
ஏ.சீ.நூறுல்லாஹ்

ஆலோசகர்கள்
டொக்டர் எஸ்.எம்.முனாஸ்டீன் (MBBS)
ஏ.எல்.நியாஸ் BA (LLB)
எஸ்.எல்.முனாஸ் (Ex.Mps) ஊடகவியலாளர்
எம்.ஐ.ஹாபில் Tr
ஏ.எல்.றியாஸ் (ஊடகவியலாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மற்றும் கிராம உத்தியோகத்தர் எம்.ஐ. அஸ்வர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எஸ்.எல்.முனாஸ், நஜா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றியாஸ் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேற்படி கழகத்தின் பொதுக்கூட்டமானது சுகாதார வழிமுறைகளைப் பேணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :