வாழைச்சேனை சக்ஸஷ் எகடமியின் முன்பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் அனுமதி நிகழ்வு (01.02.2021) நேற்று சக்ஸஷ் எகடமியில் இடம்பெற்றது.
தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் சக்ஸஷ் எகடமியின் முன்பள்ளியில் யூ.கே.ஜி, எல்.கே.ஜி, பிளே குறூப் ஆகிய வகுப்புகளுக்கு இவ்வருடம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பிள்ளைநேய முன்பள்ளியாக இது அமையவேண்டும் எனும் நோக்கில் முதல் நாள் நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.
தலைமை ஆசிரியையினால் இலட்சினை சூட்டி மாணவர்கள் தனித்தனியாக வரவேட்கப்பட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்று புதிய மாணவரால் நடப்பட்டது. பாடசாலைக்கு பிள்ளையை தயார்படுத்தல் (get ready for school) எனும் விளையாட்டு நிகழ்வில் தந்தையர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. மாணவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு நூல் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
முதல் நாள் முன்பள்ளியை ஞாபகங் கொள்ளும் வகையில் புகைப்பட கூடம் ஒன்றும் இதன்போது அமைக்கப்பட்டிருந்தது விசேட அம்சமாகும்.
முன்பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் சாத்ரக், ஆசிரியைகளாக திருமதி. அஸ்வர் நஸ்மிலா, எம்.பி.பிர்தௌசியா ஆகியோர் இந்நிகழ்வினை நெறிப்படுத்தினர்.
0 comments :
Post a Comment