திருமலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் காடழிவை ஏற்படுத்துவதாக கிழக்கு மாகாணஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பு



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் சூட்சகமாக காடழிவை சிலர் ஏற்படுத்திவருவதாகவும் இதனை தடுக்க அனைவரும் குறித்த விடயத்தோடு தொடர்பான தகவல்களை வழங்குமாறு உடன் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
காடழிவை தடுத்தல் தொடர்பான விசேட கூட்டம்( 24)ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே மேற்குறித்தவாறு அவர் தெரிவித்தார்.

காடழிவை தடுக்க பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதும் சிலர் சூட்சகமாக காடுகளை அழிக்கின்றனர். இதனை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும்.இல்லையெனின் நாம் அனைவரும் உயிர்வாழ முடியாது போகும். காடழிவை மேற்கொள்வோர் தொடர்பில் தகவல் வழங்க 0707011117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு காடழிவு தொடர்பான தகவல்களை உடன் வழங்குவதன்மூலம் அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடிவதோடு காடுகளை பேணி பாதுகாக்க முடியும்.எனவே பொதுமக்கள் இவ்விடயத்தில் கரிசனையுடன் செயற்படுமாறும் இல்லையேல் சுற்றாடல் பல பாதகங்களுக்கு உட்படும் என்று இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பல இடங்களில் காடழிவு தகவல் வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல் பதாதைகள் இன்று முதல் காட்சிப்படுத்ப்படவுள்ளது.மக்கள் காடழிவு தொடர்பான தகவல் வழங்க இப்பதாதைகள் ஏதுவாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிராமிய மட்டத்தில் காடழிவை தடுக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டத்தின் பல பாதுகாக்கப்பட்ட காடுகள் தற்போது எல்லையிடப்பட்டு வருகின்றன.முப்படை மற்றும் பொலிசார் காடழிவை தடுக்க உதவிவருகின்றனர்.திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொண்டு காடழிவில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன்நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.கிராமிய மட்ட குழுக்கள் காடுகளை பாதுகாக்க முன்வருவரல் வேண்டும்.காடழிவை மேற்கொள்வோர் தொடர்பான தகவல் வழங்கல் இன்றியமையாயதது.பொதுமக்கள் இவ்விடயத்தில் கூடிய கரிசனை கொண்டு செயற்படல் வேண்டும்.காடுகள் அழிக்கப்படும் போது உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும்.பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னோக்கி மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, முப்படை , பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :