அல்-நஜா விளையாட்டுக்கழகத்தின் நிருவாக சபைக்கூட்டம் அக்கரைப்பற்று மென்கோ கார்டனில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அல்-நஜா கழகம் யாரையும் திருப்திப்படுத்தவோ அல்லது கொள்ளையடிப்பதற்கோ ஆரம்பிக்கவில்லை. அதனை நன்னோக்கத்தின் அடிப்படையிலே ஆரம்பித்தோம். அக்கழகத்தின் ஸ்தாபகர்கள் என்ன நோக்கத்தின் அடிப்படையில் அதனை ஆரம்பித்தார்களோ அதனை ஒவ்வொன்றாக செய்து வருகின்றோம்.
இந்தக்கழகத்தினை வைத்து ஒருபோதும் கொந்தராத்து செய்யவோ அல்லது கொள்ளையடிக்கவோ மாட்டேன். அதனை யார் செய்வதற்கு முற்பாட்டாலும் அனுமதிக்கவுமாட்டோம்.
இன்று கழகங்களை வைத்துகொண்டு பிழைப்பு நடாத்துகின்றார்கள். அதனை நீங்கள் அறிவீர்கள். அப்படியானவர்களை எமது வீரர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் கழகங்களும் சங்கங்களும் ஆரம்பித்து வசூல் செய்வதையே பழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஆனால் எமது கழகத்தில் உள்ள வெளிப்படைத்தன்மையுடன் ஒற்றுமை மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கள் என்பற்றினாலே நாம் அதிகமான பணிகளை செய்தோம் இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.
அல்-நஜா கழகம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அதன் ஸ்தாபகர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிகமான பணிகளை செய்துதள்ளோம். எதிர்வரும் காலங்களில் இதனை விட அதிகமாக பணி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.
0 comments :
Post a Comment